Praveen's Blog

An Eternal Quest for Incremental Improvement

இருவது20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா storms

சனிக்கிழமை காலைல எழுந்திருச்ச உடனே நம்ம ரூமி (அதுதாங்க room mate), "Cricinfoல India Vs Australia match commentry பாருடா!" அப்பிடின்னாரு. "அமா! இவனுங்க என்னாத ஆடி, என்னாத ஜெயிச்சி!" அப்படின்னு சொலிகிட்டு, மத்த வேலைய பார்த்துகிட்டே scoreஅ track பண்ணேன். ரொம்ப நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல cricket match பார்த்த (cricinfoல தாங்க) திருப்தி! இது வரைக்கும் பல matchகல TVல live show பார்திருக்கேண். ஆனா பாருங்க, அது எதுலையும் இல்லாத ஒரு thrill இந்த ஒரு matchல இருந்தது. இந்தியா semi-final வரைக்கும் கூட போவாங்கனு யாரும் எதிர்பார்கலை. Tournament ஆரம்பிச்சதிலிருந்து யாருக்கிட்டையும் தோக்காத ஆடிக்கிடிருந்தாங்க South Africa. அவங்களை பாவம் ஒரே matchல கெலிச்சி வெளிய அனுப்பிசிட்டு உள்ள வந்தோமில்ல, அதையே இன்னும் நம்ப முடியல்லை! அதுக்குள்ள Australiaவையும் ஊத்தி மூடி வீட்டுகு அனுபிச்சாசி. Finalsல ஆடப் போறது இந்தியாவும் பாக்கிஸ்தானும். இதுல ஒரு comedy பாருங்க, இந்த ரெண்டு teamமையும் இந்த வருஷம் நடந்த ODI World Cup மொதல் roundலையே ஊட்டுக்கு அனுப்பிச்சி total damage பண்ணிட்டாங்க. பத்தாத குறைக்கு press, fans எல்லாரும் players மேல செம காண்டா ஆயிட்டாங்க. இதெல்லாம் தாண்டி இப்போ இந்த ரெண்டு teamமும் Twenty20 finals வந்தது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனா இதுல match fixing எதுனா இருக்குமோன்னு light ஒரு doubt வரத தவிர்க்க முடியல.

இதுல note பண்ண வேண்டிய matter என்னன்னா, இந்தியா first roundல வெளிய வந்திருந்தா கூட ஒன்னும் பெருசா feel பண்ணியிருக்க மாட்டோம். இப்போ finalல மட்டும் பாக்கிஸ்தான் கிட்ட தோத்தாங்கன்னா சங்கு தான்டியேய்! ஏலே Dhoni, Yuvaraj பாத்து ஆடுங்க, சொல்லிபுட்டோம்! World cupஅ கெலிக்காம உரப்பாக்க வந்திங்க, ஊட்ட கீட்ட எல்லாம் அடிச்சு காலி பண்ணிடுவோம்!

ஆனா, எனக்கு என்னமோ இந்த final matchஅ பத்தி யோசிச்சா, Chennai 600026 படத்தோட climax நியாபகத்துக்கு வந்து slightடா ஒரு hint தரமாதிரி தோனுது!

Dhoni: டேய் பஜ்ஜி, leg sideல போடாதடா! அவன் (Nazir) தான் அடிக்கிறான்னு தெரியுது இல்ல...
Harbajan: டேய் மச்சி, அவன் எங்க போட்டாலும் அடிகிறான்டா!

பின்குறிப்பு: அப்பாடா! ரொம்ப நாளா தமிழ்ல ஒரு entry போடாத குறைய போக்கியாச்சு!


Comments